கணவர் முன்பே கொடூரம்! இந்தியாவுக்கு டூர் வந்த ஸ்பெயின் பெண் கூட்டு பலாத்காரம்.. அதிர்ந்த ஜார்க்கண்ட்
குடில் அமைத்து தங்கினர்: பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி இரவு நேரத்தில் தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து தற்காலிக கொட்டகை அமைத்து அங்கேயே தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தான் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் ஸ்பெயின் சுற்றுலா தம்பதி, குடில் அமைத்து இரவு தங்கியுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் பெண்ணின் கணவரையும் இந்தக் கும்பல் தாக்கியுள்ளது. இதில் அவரும் காயம் அடைந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவர் சாலையோரம் கிடந்ததை கண்டுள்ளனர்