தேசிய ஞான கும்பம் – 2024 விழா இந்த மாதம் 21-ல் இருந்து 23 வரை மூன்று நாட்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்வி மேம்பாட்டு அமைப்பு, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி அரசு இணைந்து நடத்துகிறது. இந்திய அறிவு முறைகளை கொண்டாடுதல், கல்வியில் தாய் மொழி கல்வியை செயல்படுத்துதல் தான் இந்த விழாவின் நோக்கம்.
கற்றல்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உத்தராகாண்டு மாநில கல்வி அமைச்சர் தான்சிங் ராவத், மயிலம் பொம்மபுர ஆதீனம், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அறிவு சார்ந்த பல்வேறு கண்காட்சிகள் இடம்பெற உள்ளதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.