திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணோலிக் காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது குறித்தும் கட்சி சார்பில் பாக முகவர்கள், கமிட்டி உறுப்பினர்கள், மாவட்ட ஸ்டேண்டிங் கமிட்டி, தொகுதி கமிட்டி உறுப்பினர்கள் நியமித்து பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
2024-02-23