புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் ஒதியம் பட்டு கிராமம் அன்னை இந்திரா நகரில் மக்களின் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு மூலம் ரூ. 3.5 லட்சம் செலவில் புதிய குடிநீர் விநியோக குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா, சிவா அவர்கள் கலந்து கொண்டு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு, எழில் ராஜன், செயற்பொறியாளர், திரு, திருநாவுக்கரசு, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் திருவேங்கடம், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் குணசேகரன், திருவேங்கடம், பத்மநாபன், மாரிமுத்து, ராஜாராமன், ஆனந்து, செல்வராஜி, ஆறுமுகம், விஜயன், செல்வமணி, புத்தர், விமல் ராஜ், சுரேஷ், வினோத், ஈஸ்வரன், சந்திரகுமார், மனோகர், ராமச்சந்திரன், பாஸ்கரன், மேனன், சபரி, திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், ராஜி, சுப்பிரமணி, மிலிட்டரி முருகன், சரவணன், செல்வநாயகம், பாலகுரு, ராஜேந்திரன், திலகர், பரதன், வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2024-02-23