அ.இ.அ.தி.மு.கழக நிரந்தர பொதுச்செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன், புரட்சித்தமிழர் திரு.எடப்பாடியார் அவர்களை வணங்கி, புதுச்சேரி மாநில கழக துணை செயலாளர், Ex.Mla., திரு.வையாபுரி மணிகண்டன் அவர்கள் புதுச்சேரி முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை வீதியை சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதிகளின் 9 வயது மகள் ஆர்த்தி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அவரை திடீரென காணவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், முத்தியால்பேட்டை போலீசாரால் சிறுமியை கண்டறிய முடியவில்லை. முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தும் சிறுமி என்ன ஆனார்? சிறுமியின் நிலையை பற்றி அறிந்து கொள்ள முடியாமல், குழந்தையை காணாமல் பெற்றோர்களும், உறவினர்களும் பரிதவித்து வருகின்றனர்.

இவ்விஷயத்தில் தொடர்ந்து புதுச்சேரி அரசு அலட்சியம் காட்டி வருவது மிகுந்த வேதனைக்குரியது. சிறுமி என்ன ஆனார்? என உடனடியாக கண்டறிய வேண்டியது மிகவும் அவசியம். எனவே இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *