உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் (ரேஷன் கார்ட்) குடும்ப அட்டைகள்- திமுக கழக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார்.

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுக கழக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் (ரேஷன்கார்ட்) குடும்ப அட்டைகள் வழங்கினார். இதற்காக கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேசி ஏழை எளிய மக்களுக்கு பரிந்துரை செய்து வந்தார். இதுவரை 500 மேற்பட்ட குடும்ப அட்டைகளை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மக்களுக்கு பெற்றுத்தந்து சாதனை செய்து உள்ளார் . மகிழ்ச்சி அடைந்த மக்கள் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். சிவப்பு அட்டை பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாக மருத்துவ காப்பீடு திட்டம் பதிந்து பயன் பெறுங்கள் என்று கேட்டு கொண்டார்,

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் . இதில் உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ரூபாய் ஐந்து இலட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற்று பயன்பெற வகை செய்கிறது. 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டில் சேர்க்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர், தமிழ் நாட்டில் கலைஞர் காப்பீடு திட்டம் , தமிழ்நாடு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்று . அதிக பயன் பெறமுடியவில்லை என்றாலும் . இங்கே புதுவையில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டம் பல சிகிச்சைக்கு பயன் பெறாவிட்டாலும் சிலவற்றிற்கு பயன் பெறும். ஆகையினால் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கேட்டு கொண்டார், உடன் திமுக நிர்வாகிகள் சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நோயல், ராஜி, நிசார், செல்வம், காலப்பன், கிருஷ்ணா, ராகேஷ், ரகுமான், விசிக கற்பகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *