திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினத்தை முன்னிட்டு, உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி சங்கோதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் தலைமையில் செல்வம், அமிர்தலிங்கம், தேவா, குமார், அருணாசலம், குரு, குமரன் உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் “தாய்க்கழகம்” திரும்பும் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளரும், பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் “தாய்க்கழகம்” திரும்பியவர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றார். தொடர்ந்து, பெண்களுக்கு புடவையும், ஏழை, எளியோர்க்கு பிரியாணியும் வழங்கப்பட்டது.
2024-03-04