புதுச்சேரி தொகுதியில் தமிழிசை நின்றால்மக்கள் டெபாசிட் இழக்க செய்வார்கள்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சு !

புதுச்சேரி, மார்ச். 19–
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி பிஎம் – மித்ரா திட்டத்தின்படி புதுச்சேரி பஞ்சாலைகளை பயன்படுத்தி ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழிலாளர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று காலை ஏஎப்டி திடல் எதிரில் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், ஏஐடியுசி மாநில செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒன்றிய பாஜக அரசுக்கு புதுச்சேரி மாநிலத்திற்கு இந்த மூன்றாண்டு காலத்தில் எதையும் செய்யவில்லை. மூடிய பஞ்சாலைகள் திறப்பதற்கு உண்டான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தேதியிட்டு மூடிய பெருமை இந்த அரசையே சாரும். எதைப்பற்றியும் கவலையில்லாத முதல்வராக ரங்கசாமி உள்ளார். புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவராக திகழும் ரங்கசாமியின் உண்மை முகம் தெரியவில்லை. புதுச்சேரி மக்களைப்பற்றி, தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படமால் 19 கார்ப்பரேஷனை ஒழித்த பெருமை ரங்கசாமியையே சாரும். புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை வந்தவுடன் ஒரு ஆட்சியை கலைத்த பெருமைக்குறியவர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கி இந்த மூன்று ஆண்டுகளில் பல சவால்களை மக்களிடம் அளித்தார். ஆடாத ஆட்டமாடிய துணைநிலை ஆளுநரை பதவியை துறந்து வாருங்கள் அரசியல் செய்வோம் என்று நாங்கள் சவால் விட்டோம். இன்று ராஜினாமா செய்திருக்கிறார். அவர் புதுச்சேரியில் நிற்க வேண்டும். மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள். ஏற்கனவே டெபாசிட் வாங்காத தமிழிசையை புதுச்சேரி மக்கள் விரட்டியடிக்கும் காலம் வந்துவிட்டது. புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிட்டதாக கூறும் பாஜக–வினர் தேர்தலில் நிற்க ஆளில்லாமல் பிராந்தியம், பிராந்தியமாக தேடும் அவல நிலையில் உள்ளனர். புதுச்சேரியை சின்னாபின்னமாக்கிய பாஜக–என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக இருந்து வெற்றிவாகை சூடுவோம். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. செந்தில்குமார், எல். சம்பத், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், திமுக பொதுக்குழு உறப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், வடிவேல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *