இரா. சிவா முன்னிலையில் திமுக–வில் இணைந்தனர் !
திமுக பொதுக்குழு உறுப்பினர் வே. கார்த்திகேயன், தொகுதி செயலாளர் செ. நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட காராமணிக்குப்பம் பகுதியைச் அதிமுக இளைஞர் அணி ராம்குமார் தலைமையில் 500–க்கும் மேற்பட்டோர் திமுக–வில் இணையும் விழா இன்று காலை நடந்தது. காராமணிக்குப்பத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி வழியாக லப்போர்த் வீதியில் திமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் முன்னிலையில் தங்களை திமுக–வில் இணைத்துக் கொண்டனர். திமுக–வில் இணைந்தவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் அவர்களுக்கு திமுக உறுப்பினர் சேருவதற்கான படிவத்தை வழங்கி வாழ்த்தி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பெ. வேலவன், தகவல் தொழில்நுட்ப அணி அருண், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபாசங்கர், சிறுபான்மை அணி அலெக்ஸ்சாண்டர், தொண்டர் அணி கருணாகரன், தொமுச கண்ணன், மாணவர் அணி கண்ணன், தொகுதி அவைத் தலைவர் பாணுகேணசன், துணைச் செயலாளர் சங்கீதா, மாநில பிரதிநிதி முருகன், கிளை பொறுப்பாளர்கள் ரவி (எ) ஞானசேகரன், சாமிதாஸ், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜ், கிளைச் செயலாளர்கள் ஆதிகேசவன், உலகநாதன், செல்வம், ரமேஷ், ஜெகதீஷ், குமார், அருண், திலீப், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.