இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ் மகன் மூர்த்தி(33), மணி மகன் சீனிவாசன்(29) மற்றும் சுப்பிரமணி மகன் முத்துக்குமார்(35) ஆகியோர் சுமார் 90,000/- மதிப்புடைய (180,750 ML அளவு கொண்ட- 384 மது பாட்டில்கள் மற்றும் 24 பீர்) பாண்டிச்சேரி பாட்டில்களை கடத்தி வரும் போது காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து பாண்டிச்சேரி மது பாட்டில்கள் மற்றும் கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் கடத்தி சென்றலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய்சிங் மீனா இ. கா. ப அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.