மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
- வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும்.
- ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது.
- புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு.
- பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும்.
- உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்.